’16 அடி ஆழமான நீர்குழியில் விழுந்த தந்தையும் மகளும்’ – கொதட்டுவையில் சம்பவம்

பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் கொதடுவ IDH வடிகாலமைப்புச் சபைக்கு அருகில் உள்ள பொதுக் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட 16 அடி ஆழமான நீர்குழியில் விழுந்துள்ள சம்பவமொன்று இன்று (19.09) காலை பதிவாகியுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளுமே இந்த துர்பாக்கிய சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

எனினும் எதுவித பாதிப்புமின்றி இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நீர் குழாய் வெடித்ததன் காரணமாக அந்த பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணியளவில் இச்சம்பவத்தை தாங்கள் பார்த்ததாகவும், அதற்கு முன்னர் அப்பகுதியூடாக பயணித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply