தஸூன் சாணக்கவே உலக்ககிண்ண தொடரின் தலைவராக தொடருவார் என அறியமுடிகிறது. இன்று உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி தெரிவு செய்யப்பட்டு விளையாட்டு துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
தஸூன் சாணக்கவின் தலைமை பதவி பறிக்கப்பட்டு குஷல் மென்டிசுக்கு தலைமை வழங்கப்படுமென பல சமூக வலைத்தள ஊகங்கள் இன்று பரவி வந்தன. ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும் இது போன்ற தகவலை ஊடகவியலாளர் ஒருவர் எந்தவித அடிப்படையுமின்றி வெளியிட்டு அந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்பட்டு வந்தன.
தற்போது இருக்கும் தெரிவுக்குழு உலகக்கிண்ணம் வரை தஸூன் சாணக்தான் தலைவர் எனபதனை தீர்மானித்து அதன் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றனர். தன் துடுப்பாட்ட இடங்களை தியாகம் செய்து அணிக்காக விளையாடி வரும் தலைவர் தஸூன் சாணக்க. சில ஊடங்களே அவர் மாற்றப்பட வேண்டுமென செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உலகக்கிண்ண தொடருக்கு அவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல.
தற்போது செயற்பட்டு வரும் ப்ரமோதைய விக்ரமசிங்க தலைமையிலான தெரிவுக்குழு சிறப்பாகவே செயற்பட்டு வருகிறது. இந்த முடிவும் கூட சிறந்த முடிவே. உலகக்கிண்ண தொடரில் தஸூன் சாணக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினால் உலகக்கிண்ண தொடர் முடிவடைந்ததும் தலைமை பதவி மாற்றம் தொடர்பில் சிந்திக்கலாம். அணி முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவரை மாற்றுவது சரியான முடிவாக அமையாது.