பொலித்தீன் மூலப்பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக பொலித்தீன் பைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் பொலித்தீன் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே உள்நாட்டில் சீனி, கோதுமை மா போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உட்பட எரிபொருள் மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து பொலித்தீன் பைகளின் விலையும் உயர்வடைந்துள்ளமையால், நுகர்வோர் இது குறித்து குற்றம் சாட்டி வருவதாக அறியமுடிகிறது.