அமெரிக்க தூதுவர்-சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இன்று அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அண்மைய அமெரிக்க விஜயம் தொடர்பிலும், திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பேசியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமாதான தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில்(21.09) “நல்லிணக்கம் என்பது போரை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமல்ல. அதன் மூலம் ஏற்பட்டுள்ள வடுக்களை இல்லாமல் செய்வது, நம்பிக்கையை மீள கட்டி எழுப்புவது, மற்றும் நீண்ட நாட்களுக்கான அமைதியை ஏற்படுத்துவது” என ஜூலி சங் சுட்டிக் காட்டினார்.

சமாதானத்தை வெறும் வார்த்தைகளினால் கொண்டாடாமல், அதனை நடைமுறைப்படுத்த நாம் செயற்படுத்துவதே என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply