கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் குழுவொன்று பெண் வாடிக்கையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள கார்கில்ஸ் விற்பனை நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அந்த சம்பவத்தை உறுதிப்படுத்தவும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விற்பனை நிலையத்திலிருந்து பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பெண் வாடிக்கையாளர் ஒருவரை வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கார்கில்ஸ் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறித்த சம்பவம் தொடர்வில் தாம் வெட்கமடைவதாகவும், ஊழியர்களில் தகாத நடத்தை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், தக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், தெரிவித்துள்ளனர்.