உலகக்கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது முக்கியமான பந்துவீச்சாளர் நசீம் ஷா உபாதை காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதே முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனைய எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
நசீம் ஷா ஆசிய கிண்ண தொடரில் உபாதையடைந்து போட்டியின் நடுவே வெளியேறினார். அவருக்கு ஏற்பட்டுள்ள கை மூட்டு உபாதை குணமடைய நீண்ட நாட்கள் எடுக்குமென வைத்தியர்கள் கூறியதாக தெரிவுக்குழு தலைவர் இன்ஷமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். அவரில்லாமல் போனது அணிக்கு பின்னடைவு என கூறியுள்ள இன்ஸமாம், ஹசன் அலி தனது அனுபவத்தின் மூலம் அதனை மீள் நிரப்புகை செய்வார் என நம்புவதாக கூறியுள்ளார்.
துடுப்பாட்ட வரிசையில் ஆசிய கிண்ண தொடரில் இடம்பிடித்த சகல வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். ஆசிய கிண்ண அணியிலிருந்து ஒரு சில வீரர்கள் வெளியியேறியுள்ளனர். மேலதிக சுழற்பந்து வீச்சாளராக உஸாமா மிர் இனைக்கப்பட்டுள்லார்.
அணி விபரம் –
ஃபகார் ஷமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம் (தலைவர்), மொகமட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), சவுட் ஷகீல், இப்திகார் அகமட், அகா சல்மான், ஷதாப் கான், உசாமா மிர், முகமட் நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம் ஜூனியர், ஹசன் அலி
உலகக்கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணி தமது முதலிடத்தை இழந்துள்ளது. அவுஸ்திரேலியா அணிக்கெதிராக இந்தியா பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.