நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய 100,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.