ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இறுதிப்போட்டியில் இந்தியா மகளிர் அணி

இந்தியா மகளிர் மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கிடையில் ஹங்சூவில் இன்று (24.09) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி மூன்றாம் இடத் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 51 ஓட்டங்களை பெற்றது. இதில் நிகர் சுல்தானா 12(17) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் பூஜா வஸ்ட்ரகார் 4 விக்கெட்களையும், டிடாஸ் சந்து, அமன்ஜோத் கவுர், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 52 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜெமிமா ரொட்ரிகஸ் 20(15) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மறுபா அக்தர், பஹீமா கடுன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இன்று (24.09) காலை 11.00 மணிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையில் ஹங்சூவில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply