அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான தமது அதிருப்திகளை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

நேற்று (08/11) கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

அரசாங்கம் நிதி விடயங்களில் தொடர்ச்சியாக செயற்றிறனற்று செயற்பட்டு வருவதாகவும், முறையற்ற தீர்மானங்களும் ஊழல் மோசடிகளும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்

Social Share

Leave a Reply