கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்றைய தினம் (25.09) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி மன்னார், நுவரெலியா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள். பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தபால் வருவாயை அதிகரிக்கும் சட்ட மேம்பாட்டு முன்மொழிவுகளை உடனடியாக அமற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ஊழியர் உரிமைகளை பறிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதோடு, தபால் ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபாய் வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.