இலங்கையர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்காக வழங்கப்பட்டு வரும் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று (08/11) மற்றும் இன்று (09/11) என இரு நாட்கள் இடம்பெற்று வரும் இவ்விழாவில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அந்தவகையில் இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் இந்த உயரிய விருதுகள் வழங்கி கௌரிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக கலாநிதி வஜிர சித்ரசேனவுக்கும், இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆண்டுதோறும் இந்தியாவின் குடியரசு தினத்தன்று நடத்தப்படும் இவ்விருது விழாவானது, கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இவ்வாண்டு 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இந்திய ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக இம்முறை 7 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சாதனையாளர்கள் பட்டியலில் பத்மவிபூஷண் விருதுகளை,

பொதுவிவகாரங்கள் துறை – மறைந்த தி. அருண்ஜேட்லி,
பொதுவிவகாரங்கள் துறை – திருமதி. சுஷ்மா சுவராஜ்,
விளையாட்டுத் துறை – திருமதி எம்.சி மேரிகோம் ஆகியோரும்,

பத்மபூஷண் விருதுகளை,

விளையாட்டுத் துறை – பி.வி சிந்து,

பத்மஸ்ரீ விருதுகளை,

விளையாட்டுத் துறை – கான் ஸஹீர் கான் பக்தியார் கான்,
கலைத்துறை – கங்னா ரணாவட் ஆகியோரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

Social Share

Leave a Reply