சரத் வீரசேகரவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்புப் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் குறித்த செயலமர்வுக்கு துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பவர்கள் அமெரிக்க விசா பெற வேண்டிய சூழலில்,தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர விண்ணப்பித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்கள் பட்டியலில் இருந்து சரத் வீரசேகரவின் பெயரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அதில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கான மக்கள் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தாம் தெரிவித்த அறிக்கையினால் அமெரிக்கா தனக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளதோடு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply