ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை

சீனாவில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நேற்று(25.09) 8 விளையாட்டுகளில் 17 போட்டிகளில் பங்குபற்றியிருந்தது. இவற்றில் இரண்டு ரக்பி போட்டிகளில் வெற்றி கிடைத்தது.

ஃபுயாங் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றை B பிரிவு படகோட்டப் இறுதிப் போட்டியில் மொஹமட் நப்ரின் 7 நிமிடம் 39.20 செக்கன்களில் நிறைவு செய்து 4வது இடத்தைப் பிடித்துக் கொண்டார். மஹேஷி பத்ரா பெண்கள் பி பிரிவு இறுதிப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்தார். 8 நிமிடம் 36.99 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

நீச்சல் போட்டிகளின் தெரிவுகாண் போட்டிகளில்(Heats) அகலங்க பீரிஸ் 50 மீட்டர் பிற்புற நீச்சலில்( Backstroke) 04 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார், 26.01 என்ற செக்கன் அளவீடு புதிய இலங்கை சாதனையாக பதிவாகியுள்ளது. 50 மீட்டர் திறந்த நீச்சல் போட்டியில்(Freestyle) 06 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டார். மகளிர் 50 மீட்டர் பிற்புற நீச்சலில்( Backstroke) கங்கா செனவிரட்ன எட்டாமிடத்தை பெற்றுக் கொண்டார்.

ரைக்வொண்டோ போட்டிகளில் சாலிந்த சம்பத் 58 kg எடைப்பிரிவில் கம்போடியா வீரரை 2-0 என வெற்றிவெற்றி பெற்று 16 பேரடங்கிய சுற்றுக்கு முன்னேறினார். அந்த சுற்றில் தென் கொரியா வீரர் ஜங் ஜூன் இடம் 0-2 என தோல்வியடைந்து வெளியேறினார். மற்றுமொரு வீரரான IPK மஹதுல 58 kg எடைப்பிரிவின் 16 பேரடங்கிய சுற்றில் தகுதியிழந்தார்.

சாமர ரெப்பியலாகே 73 kg எடைப்பிரிவிக்கான ஜூடோ போட்டிகளில் 9 ஆம் இடத்தில நிறைவு செய்தார். க்ரிக்கிஸ்தான் வீரருடன் 10-0 என தோல்வியடைந்து அவர் வெளியேறினார்.

மகளிருக்கான டிங்ஜி படக்குப் போட்டியின்(Dinghy – ILCA4) ஒன்பதாம் மற்றும் பத்தாம் போட்டிகளில் ஆறாவது இடத்தையும் ஏழாமிடத்தையும் பெற்றுக் கொண்டார். ஆண்களுக்கான இதே போட்டியில் தரேன் நாணயக்கார மூன்றம் மற்றும் பத்தாம் இடங்களை போட்டி 09,10 இல் முறையே பெற்றுக் கொண்டார்.

வ்ஸு போட்டிகளில் பெத்தும் பாலவர்தன 60 kg எடைப்பிரிவிக்கான போட்டிகளில் 1/8 இறுதிப் போட்டியில் தென் கொரியா வீரரிடம் தோல்விடைந்தார். நிபுன் வீரசிங்க 65 kg 1/8 இறுதிப் போட்டியில் வியட்னாம் வீரரிடம் தோல்விடைந்தார்.

ரக்பி போட்டிகளில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை வெற்றி பெற்று முந்நீரிச் செல்கிறது. 36-10 மற்றும் 21-10 எனும் புள்ளிகளை ரக்பி அணி பெற்றுக் கொண்டது.

இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் வெள்ளிப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளது.

இன்று வரை சீனா 39 தங்கப்பதக்கங்களுடன் 69 பதக்கங்களை வென்று முத்லிடத்தைப் பெற்றுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

26.09.2023 காலை 10.30 வரையான பதக்கப்பட்டியல் விபரம் கீழுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை

Social Share

Leave a Reply