உலகக்கிண்ண தொடரின் பயிற்சிப் போட்டிகள் இன்று இந்தியாவில் ஆரம்பித்துள்ளன. இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 68(64) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 55(79) ஓட்டங்களையும், குசல் பெரேரா 34(24) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹெதி ஹசன் 3 விக்கெட்களையும், தன்சிம் ஹசன் ஷகிப், ஷொரிபுல் இஸ்லாம், நசும் அஹமட், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தல ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குஷல் பெரேரா நல்ல முறையில் துடுப்பாடிய போதும் தோல் மூட்டு உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இது இலங்கை தயார்ப்படுத்தல்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும். பயிற்சிப் போட்டியில் துடுப்பாட்ட இடங்களை மாற்றி துடுப்பாடியிருக்க முடியும். இருப்பினும் அதே இடங்களில் துடுப்பாடினார்கள். போர்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட தஸூன் சாணக இன்று 17 பந்துகளில் 03 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். விக்கெட்கள் வீழ்ந்தால் அடுத்தடுத்து ஆட்டமிழக்கும் இலங்கையின் வழமையான வியாதி இன்றும் இலங்கை அணிக்கு தொற்றிக்கொண்டது.
பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மொஹமட் ரிஷ்வான் 103 ஓட்டங்களையும், பபர் அஸாம் 80 ஓட்டங்களையும், சௌட் ஷகீல் 75 ஓட்டங்களையும் பெற்றனர். மிட்செல் சென்ட்னர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டியும் மழையால் பாதிக்கப்பட்து.