வரி சேகரிப்பில் காணப்படும் ஊழல் மற்றும் அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடு காரணமாக 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்படுவதாக பாராளுமன்ற பொருளாதராக்குழுவினால் இனம் காணப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது முன்னேற்றம் காணப்படுகின்ற போதும், இந்த வருடத்துக்கான ஆரம்ப திட்டத்தோடு ஒப்பிடும் போது 15 சதவீதம் மீதமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்க திணைக்கம், மதுவரி திணைக்களம் ஆகியவற்றிலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திணைக்கள அதிகாரிகள் வினைத்திறனுடன் ஊழலின்றி செயற்பட்டால் முன்னேற்றம் ஏற்படுமென்றே தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
இந்த விடயம் காரணமாக பாரளுமன்ற பொருளாதாரக்குழு 50 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு ஒன்றை நியமிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது.
“86 சதவீதமான வரி 464 வாடிக்கையாளர்களிடமிருந்தே உள்நாட்டு வரி திணைக்களத்தினால் அறவிடப்படுகிறது. 2500 ஊழியர்கள் இருந்தும் ஏன் மிகுதியானவர்களிடமிருந்து வரி அறவிடப்படமுடியாமல் உளள்து?” என பாராளுமன்ற பொருளாதரக்குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு முன்னணி மில் உரிமையாளர் உட்பட பல தொழிலதிபர்கள் வரி செலுத்துவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.