பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்ட வேளை, அதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சம்பிக்க MP பாராளுமன்றில் நேற்று (09/11) தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (10/11) முற்பகல் 9.15 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடளிக்க மஹிந்தானந்த MP வருகை தந்திருந்ததாக அறியமுடிகிறது.
