சகல நிறுவன எரிபொருட்களது விலைகளும் உயர்வு

இலங்கையில் எரிபொருட்களை விநியோகம் செய்யும் இலங்கை பெற்றோலியம், லங்கா ஐ.ஓ.சி, சினொபெக் ஆகிய மூன்று நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ரக பெற்றோலை 4 ரூபா அதிகரித்து 365 ஆக புதிய விலையை அறிவித்துள்ளது. அத்தோடு 95 ரக பெற்றோல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டோ டீசல் 10 ரூபா அதிகரிக்கப்பட்டு 351 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 421 ரூபாவாகவும் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய் 11 ரூபா அதிகரிக்கப்பட்டு 242 ரூபாவாக புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலையை ஒத்ததாக தமது விலைகளை உயர்த்தியுள்ளது.

இதேவேளை சினொபெக் நிறுவனம் 92 ரக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி 358 ரூபாவாக அறிவித்துள்ளது. 6 ரூபாவை 95 ரக பெட்ரோலுக்கு அதிகரித்து 420 ரூபாவாக நிர்ணயம் செய்துள்ளது. சூப்பர் டீசல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 417 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் 61 ரூபா அதிகரிக்கப்பட்டு 417 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply