அவசரகால மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (02.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
அதற்கமைய, அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சிற்குள் உள்ள கொள்வனவு செயல்முறைகளை கவனிக்கவும், மதிப்பீடு செய்யவும் மற்றும் ஒழுங்குபடுத்தவும் மருத்துவ முகாமைத்துவ மற்றும் மூலோபாய குழுவொன்று (MMSC) நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான மருந்துக் கொள்முதல் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், தரப்படுத்தவும், மேலும் விரைவுபடுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.