தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை வருகைப் பதிவேடு கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply