உலகக்கிண்ண தூதுவராக சச்சின்

சர்வதேச கிரிக்கெட் பேரவை, (ஐசிசி) இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரை 2023 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான சர்வதேச தூதுவராக அறிவித்ததுள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பிப்பதற்கு இரண்டு தினங்கள் உள்ள நிலையில் மாஸ்டர் பிளாஸ்டர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ண முதற் போட்டியில் கிண்ணத்தை மைதானத்துக்கு எடுத்து வந்து உலகக்கிண்ண தொடரை சச்சின் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பந்து பொறுக்கி வழங்கும் பையனாக இருந்து, 6 உலகக்கிண்ண தொடர்களில் விளையாடியது எனக்குள் விசேட இடத்தில் இருக்கிறது எனக் கூறிய சச்சின் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரை வென்றது பெருமையான தருணம் என கூறியுள்ளார். இங்கே இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 2023 ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பல வீரர்களும் அணிகளும் விளையாடுவதனை பார்க்க ஆர்வமாக காத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த தொடர் இளம் மகளிர் மற்றும் ஆண்களை கவருமென சச்சின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சச்சினுடன் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாபிரிக்கா அதிரடி வீரர் AB டி வில்லியர்ஸ், இங்கிலாந்து உலகக்கிண்ண வெற்றி அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஆரோன் பிஞ்ச், சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், நியூசிலாந்து வீரர் ரொஸ் ட்ரெய்லர், இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா, இந்தியா மகளிர் அணி முன்னாள் தலைவர் மித்தாலி ராஜ், பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் இந்த உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் தூதுவர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐந்தாம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் முதற் போட்டியுடன் உலகக்கிண்ணம் ஆரம்பிக்கவுள்ளது. 48 போட்டிகள் 10 இடங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன. 19 ஆம் திகதி இறுதிப் போட்டி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரா மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply