கடந்த ஒன்பது மாதங்களில் முன்னணி அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஒன்பது மாதங்களில் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 42% அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நோயாளிகளின் ஆர்வம் குறைந்து வருவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.