இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆசிய விளைட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 08 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்ப்பை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. இதில் நூர் அலி ஷர்டான் 51 ஓட்டங்களையும், ஷகிதுள்ளா 23 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் துஷார 4 விக்கெட்களையும், ஷகான் ஆராச்சிகே 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இன்று தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த் 01 விக்கெட்டினை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷகான் ஆராச்சிகே 22 ஓட்டங்களையும், லசித் க்ரூஸ்புல்லே 16 ஓட்டங்களையும் பெற்றனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குலாபிதீன் நபி, குவைஸ் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அஆகிய அணிகள் அரை இறுதி போட்டி வாய்ப்பை பெற்றுள்ளன.