இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (04.10) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது இளம் பெண்ணுடன் தவறாக நடந்துகொண்டமை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்தே இன்று நாடு திரும்பியுள்ளார்.
விரைவில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.