இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகுகிறார்

இலங்கை பெற்றோலியா கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடந்த 14 மாதங்களாக கமையாற்றிய மொஹமட் உவைஸ் மொஹமட் இன்றுடன் தனது பதிவியிலிருந்து விலகவுள்ளார். வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவை நேற்று(03.10) அவர் சந்தித்து தனது விடைபெறுதலை நேரடியாக தெரிவித்துள்ளார்.

“எனது வேண்டுகோளுக்கிணங்க 14 மாதங்களுக்கு முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியினை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மிக மோசமான கடினமான சவால் மிக்க காலகட்டத்தில் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது” என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தனது சொந்த காரணங்களுக்காவும், தனது தொழில்சார் நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை பெற்றோலியா கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் பதவி விலகிறார் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துளளார்.

Social Share

Leave a Reply