இலங்கை பாகிஸ்தான் உலகக்கிண்ண போட்டி ஆரம்பம்

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் எட்டாவது போட்டி இன்று(10.10) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இரு அணிகளும் சம பல அணிகளாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறன. மஹீஸ் தீக்ஷண அணிக்கு திரும்பியதன் மூலம் இலங்கை அணி மேலும் பலம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி முதற் போட்டியில் வெற்றி பெற்று பலமாக களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு இலங்கை அணிக்கு சிக்கல் வழங்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேவேளை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பாகிஸ்தான் அணிக்கு சவால் வழங்கும் என நம்பலாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், ஹஷார்ட் ஷபீக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

இலங்கை அணி: தசுன் சாணக (தலைவர்), குஷல் மென்டிஸ், குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே,மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன

Social Share

Leave a Reply