ஆசிய பதக்க வெற்றியாளர்கள் இலங்கை வந்தனர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வெற்றியாளர்கள், மற்றும் ஏனைய போட்டியாளர்கள் நேற்று பின்னிரவு 11.30 அளவில் நாட்டை வந்தடைந்தனர்.

18 வயதான தருஷிகா கருணாரட்ன 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு கிடைத்த தங்கப்பதக்கமாக இது அமைந்தது. ஈட்டி எறிதலில் நதீஷா லக்மகே வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் வெளிப்பதக்கம் இலங்கை அணிக்கு கிடைத்தது. கிரிக்கெட் அணி ஏற்கனவே நாடு திரும்பிவிட்டது.

400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் வெண்கலப்பதக்கங்கள் வெல்லப்பட்டன.

வருகை தந்த வெற்றியாளர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்பட்டனர்.

Social Share

Leave a Reply