இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

உலகக்கிண்ண தொடரின் ஒன்பதாவது போட்டி இந்தியா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் டெல்லி அருண்ஜட்லி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் கூடுதலான மொத்த ஓட்ட எண்ணிக்கை, ஒரு அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை, வேகமான சதம் ஆகிய உலகக்கிண்ண சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

இன்றும் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்ப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் துடுப்பாட்ட பலம் கொண்ட இந்தியா அணி ஓட்டங்களை அடித்து தாக்கி பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி பலமான நல்ல அணி. ஆனால் பங்களாதேஷ் அணியுடன் திடீரென தடுமாறிப்போனது எதிர்பாராதது. இன்று ஒரு மீள் வருகை ஒன்றை ஏற்படுத்துமெனவும், கடுமையாக இந்தியா அணியுடன் போராடும் என நம்பலாம்.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் மேலதிகமாக தேவை என்ற நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் நீக்கப்பட்டு ஷர்டூல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஷர்டான், மொஹமட் நபி , எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், அஹமட் லகன்வாய், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், இஷன் கிஷன், ஷர்டூல் தாகூர்

Social Share

Leave a Reply