மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் ஷீனத் நகர்ப்பகுதியில் இன்று (17/10) காலை 7.30 மணியளவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மீது,எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே, பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பயணிகளுக்குச் சேதங்களெதுவும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்