மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி மீள மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் (10/11) மூடப்பட்டிருந்த கடுகண்ணாவ பகுதி இன்று பிற்பகல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (11/11) காலை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி நாளை (12/11) வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.