இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply