உலககக்கிண்ண தொடரில் பங்குபற்றி வரும் இலங்கை கிரிக்கெட் அணியோடு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டுஸ்மாந்த சமீர ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அணியோடு பயணிக்கும் மேலதிக வீரர்களாக இவர்கள் அணியோடு நாளை(20.10) அணியோடு இணையவுள்ளனர். இலங்கை அணி வீரர்களுக்கு ஏற்பட்டு வரும் உபாதைகள் காரணமாக மேலதிக வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கும் முகமாக இந்த வீரர்கள் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்க உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டுஸ்மாந்த சமீர உபாதை காரணமாக உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்படவில்லை. உபாதை குணமடைந்து அவர் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே அணியோடு இணைந்துகொள்ளவுள்ளார்.