சிறந்த ஆரம்பத்தை தவறவிட்ட பங்களாதேஷ்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (19.10) உலககிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி பூனேயில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், அதனை தொடர முடியவில்லை. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தினர். பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் லிட்டோன் டாஸ், ரன்ஷித் ஹசன் ஆகியோர் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக 14.4 ஓவர்களில் பகிர்ந்தனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். முதல் விக்கெட் வீழ்ந்ததும் தொடர்ச்சியாக சம இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் போனது. இறுதி நேரத்தில் மஹமதுல்லா பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் பங்களாதேஷ் அணி ஓரளவுக்கு போராடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பலமான இந்தியா அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு இது போதுமா என்பது கேள்வியே.

இந்தியா அணியின் பந்துவீச்சில் சகலரும் சிறப்பாக இறுக்கமாக பந்துவீசினார்கள். ஹார்டிக் பாண்ட்யா உபாதை காரணமாக பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது.

ஷகிப் அல் ஹசன் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.துடுப்பாட்டம் பந்துவீச்சு என இருபக்கமும் பங்களாதேஷ் அணிக்கு இது பின்னடைவே. அவருக்கு பதிலாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமை தாங்குகிறார்.

இரு அணிகளும் தலா 04 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 3 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி 1 வெற்றியினையும் பெற்றுள்ளன.

இந்தியா அணி இன்று வெற்றி பெற்றால் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ரன்ஷித் ஹசன் தமீம்L.B.Wகுல்தீப் யாதவ்514353
லிட்டொன்  டாஸ்பிடி- சுப்மன் கில்ரவீந்தர் ஜடேஜா668270
நஜ்முல் ஹொசைன் சாண்டோL.B.Wரவீந்தர் ஜடேஜா081700
மெஹிதி ஹசன் மிராஸ்பிடி- லோகேஷ் ராகுல்மொஹமட் சிராஜ்031300
தௌஹித் ரிடோய்பிடி- சுப்மன் கில்ஷர்டூல் தாகூர்163500
முஷ்பிகுர் ரஹீம்பிடி- ரவீந்தர் ஜடேஜாஜஸ்பிரிட் பும்ரா384611
மஹ்மதுல்லா Bowled ஜஸ்பிரிட் பும்ரா 4636  33 
நசும் அஹமட்பிடி- லோகேஷ் ராகுல்மொஹமட் சிராஜ்141820
முஸ்ரபைசூர் ரஹ்மான்   0107 0 0 
ஷொரிஃபுல் இஸ்லாம்   07 030 1 
      
உதிரிகள்  06   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்256   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா1001 41 02
மொஹமட் சிராஜ்10006002
ஹார்டிக் பாண்ட்யா0.3000800
விராத் கோலி0.3000200
ஷர்டூல் தாகூர்09005901
குல்தீப் யாதவ்10004701
ரவீந்தர் ஜடேஜா10003802

Social Share