விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் மாலைதீவுகள் விளையாட்டு துறை, இளைஞர் விவகார, சமூக மேம்பாட்டு அமைச்சர் அஹமட் மஹ்லூப் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கிடையில் கால்பந்து, கரப்பந்து, கடல்சறுக்கு, கூடைப்பந்து, மேசைப்பந்து, மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் போன்றவற்றில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்ப்படுவது தொடர்ப்பிலும், திறமைகளை மற்றும் செயற்பாடுகளை பரிமாற்றம் செய்வது தொடர்ப்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் தொடர்பான விடயங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
தன்னுடைய நண்பரை, முதற் தடவையாக உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளளதாக விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த சந்திப்பு தொடர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.