
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டி தரம்ஷலாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலிரு அணிகளுக்கான போட்டியாக இது அமைவதனால் விறு விறுப்பாக இந்தப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
ஹார்டிக் பாண்டியாக்கு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்த்துக் கொள்ளப்பட்டுளளார். ஷர்டூல் தாகூர் நீக்கப்பட்டு மொஹமட் ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.
இரு அணிகளும் தலா 04 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுமணி அரை இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதன் காரணமாக இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுமென நம்பலாம்.
அணி விபரம்
நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி