இதுவரை 63,000 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 25 பெர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களில் 12,796 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக 63,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 63,000 குடும்பங்கள் பாதிப்பு

Social Share

Leave a Reply