மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம்!

மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து தேசிய மக்கள் விடுதலைப் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட மற்றும் எதிர்ப்புப் பேரணி பன்னிப்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பேரணி காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்னிபிட்டிய சந்தியில் இருந்து மஹரகம நகருக்கு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply