கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (23.10) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைம்பெற்றது.
இதன்போது பருவ மழையின்போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக, குறித்த துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், அனர்த்தங்களின்போது மக்களை பாதுகாப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், பூநகரி பிரதேச சபை செயலாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி, கல்வித் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.

