யாழ் இந்து கல்லூரி மைதானம் திறப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் இன்று(12/11) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய ( OBA UK ) கிளையின் ஆதரவில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கல்லூரிச் சமூகத்தினரின் பங்களிப்போடு இந்த ஆரம்ப நிகழ்வுஇடம்பெறவுள்ளது.

இங்கு பயிற்சிக்காக இரு புற்தரை கடினப்பந்து திடல்களும், ஒரு விரிப்புத் திடலும் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

திறப்புவிழாவின் விசேட நிகழ்வாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியுடனும், யாழ்ப்பாண பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள் அணியுடனும் 20-20 கிரிக்கெட் போட்டியில் கொழும்பிலிருந்து வருகை தரும் கொழும்பு றோயல் அணி நாளை (13/11) விளையாடவுள்ளது.

டிசம்பரில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) 2வது பதிப்பில் பங்கேற்கும் Jaffna Kings அணியின் பணிப்பாளர் கணேசன் வாகீசனின் (Harry) முயற்சியினால் றோயல் அணிக்கும், யாழ் தெரிவு அணிக்குமிடையிலான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Lyca குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் Jaffna Kings அணியின் உரிமையாளர் என்பது யாழ்ப்பாணம் அணியின் வீரர்களுக்கும் அணிசார்ந்த செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக இருக்குமென பலரும் எதிரிபார்க்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை அணிக்கு வீரர்களை அனுப்பும் கனவு நனவாகும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

புனரமைக்கப்பட்டு மைதானத்தில் கீழ் காணப்படும் வசதிகள் காணபப்டுவதாக யாழ் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

  1. சீரற்ற புற்தரையை கொண்ட மைதானமாக இருந்ததினால் விளையாட்டு வீரர்கள் பல அசௌகரியங்களை கொண்டிருந்தனர்.அதேவேளையில்,
  2. மழைநீர் தேங்குவதால் மைதானத்தை வருட இறுதிகளில் முற்றாக பயன்படுத்த முடியாத சூழலும் இருந்தது. தவிர,
  3. போதியளவான நீர்ப்பாசன வசதியின்றி இருந்தமை உட்பட இதர சில காரணங்களால் புற்தரையினை சீராக பராமரிக்க முடியாமலும் இருந்தது.மேற்படி காரணங்களுடன்
  4. வீரர்களுக்கான மலசலகூட வசதி
  5. நேர்த்தியான score board
  6. பாதுகாப்பான எல்லை மதில்கள்
    போன்ற பல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘திடல்’ திட்டமானது ஏறக்குறைய தன் நோக்கத்தை பூர்த்திசெய்து நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போதய மைதானம்

  1. மைதானங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் புல் வகைகளில் ஒன்றினால் பேணப்படுகின்றது.
  2. அப்புற்தரையை பேணுவதற்கு அவசியமான தானியங்கி நிலக்கீழ் நீர்ப்பாசனம் நிறுவப்பட்டுள்ளது.
  3. புற்தரையை சரியாக பேணுவதற்காக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பயன்பாட்டிலுள்ளது.
  4. நேர்த்தியான சுற்றுமதில் அமைக்கப்பட்டு கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  5. அணிகளுக்கான Dressing Room மற்றும் அணிகளுக்கு தேவையானளவு பிரத்தியேக குளியல்/கழிவு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  6. இலத்திரனியல் score board மற்றும் அதற்கான ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன.
  7. துடுப்பாட்டப்பயிற்சிக்கான புற்தரை (Turf nets) அமைக்கப்பட்டுள்ளது.
  8. போதிய சரிவுடன் (slope) கூடிய துடுப்பாட்டத்திற்குகந்த மைதான தரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  9. அழகிய மூன்று நுழைவாயில்கள் நிறுவப்பட்டுள்ளன.
  10. மழைநீரை (சாதாரண மழைநீரை) உள்ளுறிஞ்சக்கூடிய நான்கு நிலக்கீழ் நீர்த்தொட்டிகள் (sump) நிறுவப்பட்டுள்ளது.
  11. மைதானத்தினால் ஏந்தப்படும் மழைநீரை விரைவாக உறிஞ்சி நிலக்கீழ் நீர்த்தொட்டிக்குள் சேகரிக்கக்கூடிய பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply