பிரதான அரசியல் கட்சி ஒன்றின் களுத்துறை கட்சி கிளை அலுவலகம் இயங்கி வந்த வீட்டில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட களுத்துறை பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் இன்று (25.10) கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளை பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல் போன்ற சேவைகளை வழங்கும் போர்வையில் 30,000 ரூபா மாத வாடகைக்கு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 10 பீப்பாய்கள், 05 பிளாஸ்டிக் கேன்கள், எரிவாயு தொட்டிகள் மற்றும் பிற வடிகட்டுதல் கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.