அமெரிக்க துப்பாக்கிதாரி யாரென தகவல்!

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிதாரி 40 வயதான ரொபர்ட் கார்டு என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனும் அச்சம் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மைனேயில் உள்ள இராணுவத் தளத்தைத் தாக்கப் போவதாக மிரட்டியதாகவும் அதன் பின்னர் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளங்காணப்பட்டு, சம்பவத்திற்குப் பிறகு, அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கல் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply