வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை பிரதேசம்!

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்று (01.11) மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் உள்ள அக்குறணை பிரதேசம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அக்குறணை நகரின் ஊடாக செல்லும் பிரதான நீரோடையும், துனுவில வீதியின் ஊடாக செல்லும் வஹகல நீரோடையும் பெருக்கெடுத்துள்ளதால் இந்த வெல்ல பேருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணாமாக அப்பகுதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரம் வெள்ளத்தில் மூழ்கி பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.

நகரை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுளதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply