சீனி விலையில் மாற்றம்!

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பொதி செய்யப்படாத சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத பிரவுன் சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட பிரவுன் சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply