முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தாயும் தந்தையும் இல்லாத நேரத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அயலவர்களின் உதவியுடன், இவர்கள் மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த மின்சாதனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26, 19 மற்றும் 16 வயதுடையவர்களே இவ்வாறு மின்னல் தாக்கத்தினால் படுகாயமடைந்துள்ளனர்.