காதலிக்க மறுத்ததால் கத்திக்குத்து – பெண் படுகாயம்!

தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திகுத்துக்கு இலக்கான பெண் குறித்த சந்தேக நபரின் உறவுப் பெண் என தெரியவந்துள்ளது.

நாரஹேன்பிட்டி நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு தயாரானபோது குறித்த பெண்ணுக்கு அருகில் வந்த சந்தேகநபர் அவர் வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து குறித்த பெண்ணின் உடலில் பல இடங்களில் குத்திக் கிழித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply