கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இவ்வருடம் இதுவரையான காலப்பகுப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (08.11) வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் தங்கள் சுற்றுப்புற சூழல் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.