ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிக்கலுக்கு பின்னணியில் ஜனாதிபதி – விஜித ஹேரத் MP

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்குள் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் கடந்த காலங்களில் பாராளுமன்ற கோப் குழுவில் விசாரணை செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்ந்து குடும்ப ஆட்சிக்குள் உள்ளதாக விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். திலங்க சுமதிபால குடும்பம், தர்மராசா குடும்பம், ரணதுங்க குடும்பம் என தொடர்ந்து குடும்பத்துக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆட்சி உள்ளதாக தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க மிகச்சசிறநத வீரர். உலக்கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டுவந்தவர். அதில் மாற்றுக் கருத்தில்லை. இருப்பினும் அவர் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே அவரின்றி வேறு ஒருவரை நியமித்திருக்க வேண்டுமென்ற கருத்த்தை முன்வைத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த விளையாட்டு அமைச்சர் “அர்ஜுன ரணதுங்க இலங்கைக்கு விளையாட்டு மூலம் சிறந்த சேவையினை வழங்கியுள்ளார். முரளிதரனுக்கு பிரச்சினை வந்ததும் களத்தில் இறங்கி போராடியவர். அவருக்கு கிரிக்கெட்டை பரிபாலனம் செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. அதன் காரணமாகவே இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினேன்” என கூறினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அண்மைய சிக்கல்களை ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க முயற்சித்ததாகவும், ஜனாதிபதியும் இதன் பின்னணியில் இருப்பதாகும் குற்றம் சுமத்தியுள்ளார். அதன் காரணமாகவே நீதிமன்றத்தில் ஒரே நாளில் இடைக்கால நிர்வாக சபைக்கு தடை விதிக்கபப்ட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே கராட்டி சம்மேளனத்துக்கு இடைக்கால நிர்வாக சபை இவ்வாறு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்து. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இன்று வரை தடை வழங்கப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply