இலங்கை, நியூசிலாந்து போட்டி ஆரம்பம்

இலங்கை, நியூசிலாந்து போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 41 ஆவது போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்று தொடரின் தமக்கான இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றாலே சம்பியன் கிண்ண தொடருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் விளையாடுகிறனர். நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளாகலாம். இதன் காரணமாக இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜிதவுக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன சேர்க்கப்பட்டுள்ளர். நியூசிலாந்து அணியில் ஐஸ் சோதிக்கு பதிலாக லூக்கி பெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரட்ன

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (தலைவர்), டெவோன் கொன்வே, மார்க் சப்மன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், டிம் சௌதி

Social Share

Leave a Reply