ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை முறையற்றது – விளையாட்டு அமைச்சர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடை முறையற்றது என விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று(11.11) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்துளளார். கிரிக்கெட் அமைப்புகள் மீது வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே இவ்வாறான தடை விதிக்கப்படுமெனவும் தெரிவித்த அமைச்சர் உரிய காரணங்களை வெளியிடாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா கூறியதற்கு அமைவாகவே இந்த தடை வித்திக்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார். எதற்காக இந்த தடை விதிக்கப்பட்து என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்ததும் அவர்களுடன் பேசி அதற்குரிய நடடவடிக்கைகளை எடுக்கவுள்தாகவும் மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊழல் நிறைந்த பாதாள உலகக்குழுவினருடன் சம்மந்தம் கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தினர் மூலம் தனக்கு உயிராபத்து உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், பாதுகாப்பை அதிகரிக்க கோரியுள்ளதாகவும் மேலும் கூறினார். அத்தோடு ஜனாதிபதி செயலகத்தினாலும் தனக்கு ஆபத்துக்கு வரக்கூடுமெனவும், அங்கு தண்ணீர் கூட அருந்த மாட்டேன் எனவும் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பில் தற்போது முழுமையாக அறிந்து கொண்டிருப்பார் என தான் நம்புவதாகவும், அவருக்கு பிழையான தகவல்களை வழங்கி திசை திருப்ப முயற்சித்ததாகவும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவுக்கு எதிராக மீள் முறையீடு செய்யவுள்ளதாகவும், நீதிமன்றம் எந்த தீர்ப்பை வழங்குகிறதோ அதனை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தான் செயற்ப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Social Share

Leave a Reply