இங்கிலாந்து வெற்றி. பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்தது

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 44 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஏழாமிடத்தில் நிறைவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி ஐந்தாமிடத்தில் நிறைவு செய்துள்ளது.

இதனடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதலாவது அரை இறுதிப் போட்டியிலும், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (11.11) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 337 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி வந்தது. முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான் ஆகியோர் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ஜொனி பாஸ்டோ அவரது 17 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 1 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டார். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் ஆகியோர் 132 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்து கொண்டனர். பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் அவரது 24 ஆவது அரைச்சதத்தையும், இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் ஜோ ரூட் அவரது 39 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 1 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர். 3 ஆவது விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் தடுமாறியது. ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தமையினால் மிகப்பெரிய ஓட்ட இலக்கை துரதியடிக்க முடியவில்லை.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா  ஷபீக்L.B.Wடேவிட் வில்லி000200
பக்கர் சமான்பிடி – பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்டேவிட் வில்லி010900
பபர் அசாம்பிடி – ஆதில் ரஷீட்கஸ் அடிக்சன்384560
முகமட் ரிஸ்வான்Bowledமொயீன் அலி365120
சவுத் ஷகீல்Bowledஆதில் ரஷீட்293740
அகா சல்மான்பிடி – பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்டேவிட் வில்லி514561
இப்திகார் அகமட்பிடி – டாவிட் மலான்மொயீன் அலி030500
ஷதாப் கான்Bowledஆதில் ரஷீட்040710
ஷஹீன் அப்ரிடிL.B.Wகஸ் அடிக்சன்252331
மொஹமட் வசீம்  161421
ஹரிஸ் ரவூப்பிடி – பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்கிறிஸ் வோக்ஸ்352333
உதிரிகள்  04   
ஓவர்  43.3விக்கெட்  10மொத்தம்244   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டேவிட் வில்லி10005603
கிறிஸ் வோக்ஸ்5.3002701
ஆதில் ரஷீட்10005502
கஸ் அடிக்சன்08004502
மொயீன் அலி10006002
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டாவிட் மலான்பிடி- முகமட் ரிஸ்வான்இப்திகார் அகமட்313950
ஜொனி பார்ஸ்டோவ்பிடி- அகா சல்மான்ஹரிஸ் ரவூப்596171
ஜோ ரூட்பிடி-  ஷதாப் கான்ஷஹீன் அப்ரிடி607240
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்Bowledஷஹீன் அப்ரிடி8476112
ஜோஸ் பட்லர்Run Out 271831
ஹரி புரூக்பிடி-  ஷஹீன் அப்ரிடிஹரிஸ் ரவூப்301722
மொயீன் அலிBowledஹரிஸ் ரவூப்080601
கிறிஸ் வோக்ஸ்  040410
டேவிட் வில்லிஇப்திகார் அகமட்மொஹமட் வசீம்150521
கஸ் அடிக்சன்Bowledமொஹமட் வசீம்000100
ஆடில் ரஷிட்      
உதிரிகள்  19   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்337   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி10017202
ஹரிஸ் ரவூப்10006400
இப்திகார் அகமட்07003801
மொஹமட் வசீம்10007402
ஷதாப் கான்10005700
அகா சல்மான்03002500
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா08080000162.456
தென்னாபிரிக்கா09070200141.261
அவுஸ்திரேலியா08060200120.861
நியூசிலாந்து09050400100.743
பாகிஸ்தான்0904050008-0.199
ஆப்கானிஸ்தான்0904050008-0.336
இங்கிலாந்து0903060006-0.572
பங்களாதேஷ்0802060004-1.442
இலங்கை0902070004-1.413
நெதர்லாந்து0802060004-1.635

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஹரி புரூக், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், கஸ் அடிக்சன், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply