சர்வதேசக் கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்தமை நன்மைக்கே என பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால் இப்போதாவது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சுத்தம் செய்ய ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் கூறியுளளார்.
ஊழல் செய்யும் வியாபாரிகள் தொடர்ந்தும் ஊழல் செய்ய அனுமதிக்க முடியாது. அதனை நிறுத்த வேண்டாமா? ஊழல் செய்பவர்கள் தொடர்ட்ந்து செய்யட்டும். அவர்கள் பலமானவர்கள். அதற்காக பாராளுமன்றத்தில் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்றா கூறுகிறார்கள். அந்த பலமானவர்களை வரச்சொல்லுங்கள், பேசலாம். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையை வரச் சொல்லுங்கள். யாரை வேண்டுமானலும் வரச் சொல்லுங்கள். மக்களின் பிரதிநிதிகள் எங்களுக்கு இதனை சீர் செய்யும் உரிமையுண்டு. அதற்கு வேறு யாரும் தலையிட தேவையில்லை. நாங்கள் நடந்தவற்றை சொல்லுகிறோம். அப்போது அது தடையாகும். அது இல்லமால் போகும் என எமக்கு கூற வேண்டாம். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையை வரச் சொல்லுங்கள். நாங்கள் என்ன நடக்கிறது என காட்டுகிறோம்.